Book Review: 6174

61746174 by Sudhakar Kasturi

My rating: 3 of 5 stars

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் ஒரு அறிவியல் புனை கதை. கேட்டவுடன் படிக்க தோன்றியது. சுஜாதாவிற்கு பின் அறிவியல் புனை கதைகள் அரிதாகி போய் விட்டது. அவருடைய எழுத்துக்கள் தமிழ் வாசிப்பாளர்களில் ஒரு மிகபெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. என்னையும் சேர்த்து. என்னுடைய புத்தக ஆர்வம் கூட அவரிலிருந்து தொற்றிக் கொண்டதாகவே நினைக்கின்றேன்.

6174 – ஒரு வித்தியாசமான தலைப்பு. 400 பக்கங்களுக்கு மேல் தமிழில் ஒரு அறிவியல் திகில் புனைகதை இதுவரை நான் கண்டதில்லை. புத்தக ஆசிரியர் சுதாகர் கஸ்தூரி நிறைய இடங்களில் சுஜாதாவை ஞாபக படுத்துகிறார். நேர்த்தியான நடையில் ஆங்காங்கே நகைச்சுவை குறும்புகளோடு எழுதப்பட்டிருக்கிறது.

ஆங்கில எழுத்தாளர் டான் பிரவுனின் நாவல்களின் இணையான ஒரு படைப்பாக முயர்சித்திருக்கிறார். கதை போகிற போக்கில் சற்று அறிவியலையும் நம் தமிழ் எழுத்துகளின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஒரு நயமான விடயம். அதையும் செவ்வனே செய்திருக்கிறார்.

லெமூரியர்கள், எண் மற்றும் வடிவ கணிதம், படிக அறிவியல், தமிழ் புதிர்கள், பிரமீடுகள், உலக அரசியல் நிகழ்வுகள், ரா என்று அனைத்தும் அடங்கும் விதமாய் எழுதப்பட்டிருப்பது ஆவலை தூண்டுவதாக இருந்தாலும் சில இடங்களில் கதை இழுத்துக் கொண்டு போவதாக தோன்றியது. சில இடங்களில் லாஜிக் இடித்தது. நடக்க போவது எல்லாம் ஏற்கனவே முடிவு செய்து விட்டது போல் எழுதப்பட்ட புதிர்கள் குழப்பியது.

மூன்றாம் உலக போர் மூளும் விதமாக உலக அரசியல் நிகழ்வுகளை கதைக்கு சாதகமாக அமைத்திருக்கிறார். இது தான் இந்த நாவலுக்கு பிரம்மாண்டமான கதைகளத்தை உருவாக்கி இருக்கிறது. ஆனால் ஆரம்பத்தில் இருந்த பிரமாண்டம் இறுதி வரை தொடர இன்னும் கொஞ்சம் கதையில் வலு சேர்த்திருக்கலாம். மற்றபடி இந்த கதையமைப்பு அருமை.

நான் படித்த வரை தமிழுக்கு இது புதிது தான். இன்னும் இதுப் போல் புத்தகங்கள் தொடர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
View all my reviews

Advertisements

பெண்ணியம்

நிழல்களிலும்

நிர்வாணம் தேடியலையும்

அமானுட பார்வைகளில்

பதியாமல் விலகி செல்ல

உடைகளில் கண்ணியம் வேண்டும் என்றார்கள்…

 

பிஞ்சுகளை தீண்டிப்பார்க்கும்

நஞ்சடைந்த மனதின் முன்

கண்ணியம் காக்க

பெண்ணியம் தான் என்ன செய்யும்?!!

 

அச்சம்.. மடம்.. நாணம்.. என்றபடி

அவளுக்கான விதிமுறைகள்..

 

விதிகளின் வீரியத்தில்

விலகிப் போன ஆசைகள்..

சுருங்கிப் போன கனவுகள்..

 

விதிகளை தகர்த்துவிட்டு

எதிர்த்து நின்றதால்

பெண்மை இலக்கணத்தில்

பிழை என்றானாள்..

 

கற்பு எனும் கோட்டைக்குள்

கண்ணகிகளை நிறுத்தி விட்டு

பெண்ணியத்தை பிடுங்கித் தின்கிறது ஆணினம்..

 

ஆண்மையின் அதிர்வுகளில்

அடங்காமல் உயிர்த்துக் கொண்டு

சமநிலை பெற துடிக்கிறது பெண்ணியம்..

Book Review: ம்

ம்ம் by Shobasakthi

My rating: 3 of 5 stars

ஒரு சுவாரஸ்யமான தலைப்பில் எழுதப்பட்ட இந்த நாவலின் கதை மனதை பதைப்பதைக்கும் உண்மை நிகழ்வுகளின் ஊடே பயணிக்கிறது.

ஒரு கொடூரமான போர்களத்தின் பின்னணியில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையும் அதிலிருந்து ஒரு போராளி ஆதிக்க பலத்தின் பிடியில் எப்படி நசுக்க படுகிறான் என்பதையும் இந்த கதையின் மூலம் பதிவு செய்துள்ளார் ஆசிரியர் சோபா சக்தி. இது மாதிரியான பலதரப்பட்ட கதைகளை உலகம் ‘ம்’ கொட்டி கேட்டு கொண்டு மட்டும் தான் இருக்கிறது என்பதை ஒரு குமறலாகவே பதிக்கபட்டிருக்கிறது .

ஆரம்பத்தில் இருந்து நிறமி என்ற தன் மகளின் கதையாக எழுத தொடங்கி முடிவில் வக்கிரமான ஒரு தந்தையாக தோன்றும் நாயகனை எப்படிப்பட்ட மனிதனாக ஏற்றுக் கொள்ள முடியும். அவன் வாழ்வின் முழுதும் தொடர்ந்த சித்திரவதைகளும் கொடுமைகளும் அவனுக்கு அது போன்றதொரு மனப் பிறழ்வை ஏற்படுத்தி இருக்கும் என்று மட்டும் தான் என்னால் யோசிக்க முடிந்தது. முடிவு குழப்பமானதாய் இருந்தது.

கதை ஸ்ரீலங்காவின் ஒரு கடலோர கிராமத்தில் தொடங்குகிறது. ஒரு போராளியாக வாழ்கையை தொடங்கும் நாயகன்(?) போராட்டக் களத்தில் தோற்று எதிரிகளிடத்தில் சிக்கி கொண்டு அடையும் சித்ரவதைகளையும், கதை பயணிக்கும் திசையில் காணும் கொடூரங்களையும் இயல்பான எழுத்துக்களால் பதிவேற்றி இருக்கிறார். முற்றிலுமே அந்த நாட்டில் எங்கோ யாரோ ஒருவருக்கு இது போன்ற கொடுமைகள் நடந்திருக்கும் சாத்தியங்கள் இருப்பதால் இக்கதையில் வரும் சம்பங்களை வெறும் கற்பனைகளாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் கதையாக நினைத்தாலே பதறும் மனம், இவைகளை உண்மை நிகழ்வாக நினைக்கக் கூட முடியவில்லை.

இது அந்த நிலவாழ் மக்களின் போர்க்கால வாழ்கை நிலையை உணர்த்தும் அருமையான புத்தகம்.

View all my reviews

Book Review: செர்னோபிலின் குரல்கள்

செர்னோபிலின் குரல்கள்: அணுப் பேரழிவின் வாய்மொழி வரலாறுசெர்னோபிலின் குரல்கள்: அணுப் பேரழிவின் வாய்மொழி வரலாறு by Svetlana Alexievich
My rating: 5 of 5 stars

செர்னோபில் – மனித வரலாற்றின் அழிக்கமுடியாத வடு. இயற்கை அனைத்தையும் கட்டுக்குள் கொண்டுவர துடிக்கும் மனித பேராசையின் விளைவு. அறிவியல் யாருக்கும் அடிப்பணிவதில்லை என்பதை உணர்த்தும் பாடம்.

மயான காடாக மாறிய ஓரு நகரத்தின் மரண ஓலத்தை அந்த மக்களின் குரல்களின் மூலமே பதிவு செய்திருக்கிறார் இந்த புத்தகத்தின் ஆசிரியர் ஸ்வெட்லானா அலெக்சியேவிச். இதற்கான நோபல் பரிசையும் வென்றிருக்கிறார் ஆசிரியர். தமிழில் சித்தார்த்தன் சுந்தரம் மொழி பெயர்ப்பு அருமை.

ஒரு சிறிய தவறு தான் அந்த அணு உலை வெடிப்பிற்கு காரணம். அந்த விபத்தின் காரண காரியங்கள் இந்த புத்தகத்தில் அலசப்படாவிட்டாலும் அந்த மக்களின் துயரங்களையும் அடுத்தடுத்து நடந்த கொடுமைகளையும் இந்த பதிவுகளின் மூலம் காட்சி படுத்த முடிகிறது. விபத்தினை தொடர்ந்து அந்த இடத்தை சுற்றிய கிராம மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குரியாக்க பட்டது. அனைத்திலும் கதிரியக்க நச்சு. ஆட்சியாளர்கள் அரசியல் செய்து கொண்டிருந்தார்கள். அதுவரை அணுவை இயற்பியல் பாடத்தில் மட்டும் தெரிந்தவர்கள் அனைவரும் கதிரியக்கத்தை பற்றி பேசினார்கள். ராண்ட்ஜெனும் மற்ற கதிரியக்க அளவுகளும் மக்களின் வாழ்க்கையின் நீளத்தை தீர்மானித்தது.

இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு கூட ஒலித்து கொண்டிருக்கும் மரண ஓலம்.நினைக்கும் போதே பதைப்பதைக்கிறது மனம்.

ஆசிரியரின் பார்வையில் இருந்து எழுத பட்ட வரலாறாக இல்லாமல் அந்நிலவாழ் மக்களின் எண்ணங்களை தொகுத்து அதன் மூலம் அவர்களின் நிலையை பதிவேற்றி இருப்பது புதுமை(குறைந்தபட்சம் எனக்கு!?) அவர்களின் நிலையை அவர்களை விட சிறப்பாக யாராலும் சொல்லி விட முடியாது. அறியாமல் யாரோ செய்த சிறு தவறினால் சபிக்கப்பட்ட நில மக்களின் துயரை எடுத்துரைக்கும் சிறப்பான புத்தகம்.

View all my reviews

இதுவும் கடந்து போகும்!!!

துயரங்களை துடைத்தெரிய
காத்திருக்க வேண்டி நின்றால்
வீணாக போய்விடும்
பொன்னான நேரங்கள்…

சுமைகளை ஒன்றுசேர்த்து
சோகங்களோடு பூட்டி விட்டால்
அடியாழத்தில் அமிழ்ந்து போகும்
பாரங்கள் அத்தனையும்…

தூரங்கள் என்றுகொண்டு
பயணங்கள் நின்று போனால்
வாழ்க்கையதன் மறுமுனைக்கு
வேறு வழியின்றி திசை மாறும்…

தோல்விகள் எல்லாம் – சிறு
வேள்விகள் என்று கொண்டால்
நெஞ்சுடைய வலி கூட
சிறு பஞ்சாக மாறி போகும்…

திடமான மனதோடு
காலங்களை கடந்து விட்டால்
மரணத்தின் விளிம்பில் கூட
மாற்றங்கள் செய்திடலாம்…

நடப்பவைகளின் நியாயம் தேடி
புதிர்களுக்குள் புதைந்து போனால்
விடை தேடி அலையும் மனதில்
என்றுமே அமைதி இல்லை…

வாழ்கையின் திசை மாற்றம்
நன்மைகே என நினைத்து விட்டால்
எல்லா கேள்விகளுக்கும்
விடை ஒன்று தேவை இல்லை…

Book Review: அறியப்படாத தமிழகம்

அறியப்படாத தமிழகம் [Ariyappadaatha Thamizhakam]அறியப்படாத தமிழகம் [Ariyappadaatha Thamizhakam] by Tho. Paramasivan
My rating: 3 of 5 stars

When I ordered this book online, I thought this would explain about the history of Tamils to a great extent. (My Bad!!) I didnt read the description of this book properly. However upon receiving this book I realised that this book explains about the culture of tamil community.

Apart from a disappointing start, I started reading this book. The author explained a lot more about the cultural and traditional values followed by the Tamils from the great literatures like Thirukkural, Silapathikaram, Puranaanuru, Aganaanuru, Seerapuranam etc.,

It starts with explaining the meaning and idea behind the name of the language “Tamil”. It continues to explain more about the life and community as a whole on following chapters. This book touches about the religious and caste based conflicts arised while the evolution of the community that was affected by continuous acts of wars and the colonisation under British.

Some facts are interesting to know. Some facts provide more insight about the culture. Good read.

View all my reviews

Book Review: Kumari Kandama Sumeriama?

Kumari Kandama Sumeriama?Kumari Kandama Sumeriama? by B. Prabhakaran
My rating: 5 of 5 stars

This book is an experimental study about the origin of Tamils. B. Prabhakaran the author of this book goes beyond the extent of connecting Sumerian civilisation considered to be the oldest in the world with the Tamil civilisation. He also gives plausible proofs for this connection throughout the book. Quite interesting and overwhelming to read when he tries to connect the dots and dashes of the history of civilisations. He denies the existence of Kumarikandam with an logical geographical impossibility. He takes the indian mythology, fables, archiological research which resembles the Sumerian, Greek and Sindhu Civilisation as the fact of this study. Wonderful read.

View all my reviews