முதல் காதல்

நான் ஒரு நாள் இங்கே தான் நின்று கொண்டிருந்தேன்

அவள் என்னை பார்த்து போனாள்…

நான் என்னென்னவோ நினைத்துக் கொண்டேன்..

அவள் தூரத்தில் சென்று திரும்பி பார்ப்பதை

நானும் பார்த்து விட்டேன்…

அவள் அழகியென்று நினைத்துக் கொண்டேன்…

 

அவள் ஒருநாளும் இப்படி சிரித்ததில்லை என்னை பார்த்து…

நான் என்னவென்று தெரியாமல் சிந்திதேன்..

அவள் பேசுவதை கேட்க

நான் பேச போகிறேன்

அவளிடம்…

 

நான் ‘ஹலோ’ என்றேன்..

அவள் ‘என்ன’வென்று பார்த்தாள்…

நான் காயம் பட்டுப் போனேன்

அவள் கண்களால்…

நான் ஒருவார்த்தையும் கிடைக்காமல் ‘ஒன்றும் இல்லை’ என்றேன்…

அவள் ‘உனக்கும், எனக்குமா…’ என்றாள்…

 

நான் என்னை தொலைத்தேன்

அவளிடம்…

நான் தேடிக்கொண்டிருக்கும் போதே

அவள் சிரித்து விட்டுப் போனாள்… மறுபடியும்

நான் ஒன்றும் இல்லாதவன் போல் ஆகியிருந்தேன் அன்றிரவு…

 

அவளை தேடி சென்றேன் அதே இடத்தில்…

நான் காத்திருந்த நேரம் மழை துளிர்த்தது…

அவள் வரும் நேரம் மழை கணத்தது…

நான் பக்கத்து கூரையில் மழையை தவிர்த்தேன்…

 

அவள் நனைந்துக் கொண்டே ஓடி வந்தாள்…

நான் மழை மேல் வருத்தம் கொண்டேன்…

அவளை ‘நீர்’ எப்படி நனைக்கலாம் என்று…

 

நான் பார்த்துக்கொண்டிருக்கும் போதே

அவள் என்னருகில் வந்து நின்றாள்…

நான் அதிசயித்துப் போனேன்..

அவள் தந்தை ஒரு சிற்பியோ என்று…

 

நான் பேச வாய் எடுத்தேன்

அவள் என்னை பார்த்துக்கொண்டே மழையை ரசித்தாள்…

நான் அவளை ரசித்தேன்…

அவள் அமைதியாக இருந்தாள்,

நான் பெண்கள் என்றால் அழகு என்றுக் கொண்டேன்…

 

அவளிடம் சொல்ல மறந்து போனேன்

நான் காதலிப்பதை…

அவள் பார்வையால் சொல்லி விட்டுப் போனாள்,

நான் தான்

அவள் காதல் என்பதை…

Advertisements